PSTNT Logo
பதினெண் சித்தர்
திருநெறியதமிழ்
வழிபாட்டுச் சங்கம்

பதினெண் சித்தர் திருநெறியதமிழ் வழிபாட்டுச் சங்கம்

அவரவர் தாய்மொழியின் வாயிலாக வழிபடவும், வாழவும் தலைமுறையினரை ஊக்குவித்தல்
“தமிழ் கூறும் நல் உலகிற்கு தமிழ் மொழி வழிபாட்டுப் பூசைமொழி எனும் மந்திர, மந்திறங்கள், இசை எனும் அசை நுட்பங்கள், ஆன்மீகக் கருத்துகள் மற்றும் இன்னும் பல அரிய தமிழ் வாழ்வியல் நெறிமுறைகள்.”
வளர்ச்சி தமிழால் உயர்வோம்
பாதுகாப்பு அருளால் காப்போம்
பங்களிப்பு சமூகத் திருப்பணி
பொதுவுடைமை அனைவருக்கும் சமம்
50-ஆம் ஆண்டு பொன்விழா
சங்கத் தலைவர் சித்தர் பிறம்ம தேவர்
“தமிழை அறிமின்! தமிழே அனைத்தும்!”
— சித்தர் பிறம்ம தேவர், ந.சண்முகம்
அறிமின் அறநெறி!
ஆற்றுமின் நன்னெறி!
பெறுமின் நன்மதிப்பு!
தமிழே அனைத்தும்!
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
சித்தர் நெறிக் கலை ஆய்வு நிலையம் (The Cosmic Research Centre)
50 ஆண்டு பொன்விழா
அருள்மிகு விநாயகர்

பதினெண் சித்தர் திருநெறியதமிழ் வழிபாட்டுச் சங்கம்

இச்சங்கம், தமிழ் கூறும் நல் உலகிற்கு தமிழ் மொழி வழிபாட்டு பூசைமொழி எனும் மந்திர, மந்திறங்கள், இசைஎனும் அசைநுட்பங்கள், ஆன்மீக கருத்துகள் மற்றும் இன்னும் பல அரிய தமிழ் வாழ்வியல் நெறிமுறைகள் அடங்கிய ஆய்வு நூல்களை பாடத்திட்டங்களாக வடிவமைத்து வெளியிடுகிறது.

மேலும், திருநெறியதமிழ் நான்மறையாளர்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவர்களின் மூலமாக தமிழ்வேத அருமறைஎனும் செந்தமிழ் நான்மறைபயிற்சிகள் வழங்கி, பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு யாகம், வேள்வி, பூசை, குடமுழுக்கு மற்றும் திருநெறியதமிழ் வழிபாடுகளைநடத்துவதற்கான சான்றிதழ்கள் வழங்குகிறது.

மாவட்டந்தோறும் திருநெறியதமிழ் வழிபாட்டு ஆலயங்கள் மற்றும் ஒன்பதுகோள் திசைநோக்கு கருவறைக் கோயில்கள் தனிமனிதர்கள் ஆர்வத்திற்கும் தரத்திற்கும் ஏற்ப அவரவர்கள் இடத்தில் அமைத்து, தமிழ் மொழியில் பூசை, வழிபாடு நிகழ்த்திட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் அளிக்கிறது.

தொல்காப்பிய அடிப்படை

தமிழரின் வாழ்வியல் இலக்கணமான தொல்காப்பிய இயல் மற்றும் யாழ் நூல் வழியில் தொடர் இசை-ஒலி ஆய்வுகள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

சாதி, மதம், இனம் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான தமிழ் தெய்வீக வழிபாட்டுரிமை.

மாதாந்திர அறிக்கைகள்

2016 முதல் மக்கள் பயன்பாட்டிற்காக மாதாந்திர ஆய்வறிக்கைகளை அச்சிட்டு தொடர்ந்து வழங்கி வருகிறது.

தாய்மொழிக் குடமுழுக்கு

திருக்கோயில் கருவறை வழிபாடு மற்றும் திருக்குடமுழுக்குகளை முழுமையாகத் தமிழில் நிகழ்த்தும் வழிமுறை.

முதன்மை ஆய்வு நூல்கள்

சங்கத்தலைவர் சித்தர் பிறம்ம தேவர் அவர்களின் 50 ஆண்டு கால தவ ஆய்வில் மலர்ந்த மூன்று பொக்கிஷங்கள்

2003 நான்மறை மெய்ந்நிலை மந்திரங்கள்
முதல் நூல் • தொகுதி 1

நான்மறை மெய்ந்நிலை மந்திரங்கள்

“நூல் சிறியது, நோக்கம் பெரியது!”

சங்கத்தின் முதல் நூலாக 2003-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுப் பெற்றது. தமிழ் மந்திரங்களின் மெய்ந்நிலை, ஒலி அதிர்வுகள், தாய்மொழி வழிபாட்டு நுணுக்கங்களை மிகச் சுருக்கமாக விளக்கும் அருமையான நூல்.

2008 தமிழ் வேதம்
இரண்டாவது நூல் • தொகுதி 2

தமிழ் வேதம்

முழுமையான விரிவான சமயப் பாடநூல்

சங்கத்தமிழ் இலக்கியங்கள் மற்றும் பன்னிரு திருமுறைகளை ஆராய்ந்து 2008-ல் வெளியிடப்பட்டது. தமிழர் சமய வாழ்வியல் சடங்குகள் அனைத்தும் தமிழில் நிகழ்த்திட இந்த ஒரு நூல் போதுமானது என வரவேற்பு பெற்றது.

2025 செந்தமிழ் நான்மறை
மூன்றாவது நூல் • ஆய்வு ஆவணம்

செந்தமிழ் நான்மறை

ஒப்பற்ற அருமறை ஆய்வறிக்கை (Thesis)

2025-ஆம் ஆண்டு கிண்டி சாங்கு சித்தர் சீவசமாதி குடமுழுக்கு விழாவின் போது வெளியிடப்பட்டது. தொல்காப்பியம் மற்றும் யாழ் நூல் அடிப்படையிலான புதிய ஆன்மீக-அறிவியல் வாழ்வியல் ஆவணம்.

சங்கத்தின் முதன்மைச் செயல் திட்டங்கள்

தமிழ் நான்மறையாளர்கள் உருவாக்கம் மற்றும் மாவட்டம் தோறும் ஒன்பதுகோள் திசைநோக்கு கோயில்கள் அமைப்பு

திருநெறியதமிழ் நான்மறையாளர்கள் பயிற்சி

தமிழ் வேத அருமறை எனும் “செந்தமிழ் நான்மறை” வழிபாட்டுப் பூசைமொழியை முழுமையாகக் கற்பித்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு முறைப்படியான சான்றிதழ்களை சங்கம் வழங்குகிறது.

யாகம், வேள்வி, பூசை நடத்தும் முறைமுறைப் பயிற்சி
திருக்குடமுழுக்கு (மகா கும்பாபிஷேகம்) தாய்மொழியில் நிகழ்த்தும் அதிகாரம்
ஒலிக் குற்றமின்றி மந்திரங்களை ஓதும் அசை நுட்பப் பயிற்சிகள்
சாதி, மதம், பாலின பேதமின்றி ஆர்வம் உடைய எவருக்கும் சம வாய்ப்பு
பயிற்சியில் இணைய தொடர்பு கொள்க

ஒன்பதுகோள் திசைநோக்கு கருவறை கோயில்

தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் தோறும் மக்களின் ஆன்மீக வாழ்வியல் பாதுகாப்பிற்காக தமிழ் முறைப்படி ஒன்பதுகோள் திசைநோக்கு கருவறை கோயில்களை அமைக்கும் திருப்பணியை சங்கம் துவக்கியுள்ளது.

நாள், கோள், மீன், அருவடிவ இராசி மற்றும் வான்பாம்பு பாதிப்புகளில் இருந்து தற்காப்பு
தனிநபர்கள் தங்களின் நிலத்தில் அமைத்திட வழிகாட்டுதலும் பயிற்சியும்
ஐம்பெரும் இயற்கையின் அருள் ஆற்றல்களை இல்லத்தில் கூட்டும் சிறப்பு அமைப்புகள்
பொதுவுடைமை தத்துவத்தில் அனைவருக்கும் சமமான இறை வழிபாடு

ஆன்மீகக் கட்டுரைகள் & செய்திகள்

சங்கத்தின் அதிகாரப்பூர்வ ஆன்மீகப் பதிவுகள் மற்றும் செய்திகள்

தாய்மொழி வழிபாட்டின் பெருமை ஆன்மீகம் 15 Jan 2026

தாய்மொழி வழிபாட்டின் பெருமையும் நான்மறை தத்துவங்களும்

அவரவர் தாய்மொழியின் வாயிலாக இறைவனைத் தொழுவதே மிக உன்னதமான ஆன்மீக நிலை. சித்தர்களின் பதினெண் நெறியில் தாய்மொழி வழிபாட்டு மகத்துவம்.

பொன்விழா சிறப்பு அழைப்பு சங்கச் செய்தி 01 Feb 2026

சங்கத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா சிறப்பு அழைப்பு & அறைகூவல்

1977 முதல் 2026 வரை 50 ஆண்டு கால தன்னலமற்ற தமிழ்ப்பணி. பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஒன்பதுகோள் திசைநோக்கு கோயில் திருப்பணி அறிவிப்பு.

குடமுழுக்கு விழா நிகழ்வு 20 Feb 2026

கிண்டி சாங்கு சித்தர் சீவசமாதி குடமுழுக்கு விழா & நூல் வெளியீடு

கிண்டி சாங்கு சித்தர் சீவசமாதி குடமுழுக்கு நன்விழாவில் 'செந்தமிழ் நான்மறை' ஆய்வு நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தன்னலமற்ற பொதுவுடைமை தமிழ்ப்பணிக்கு கரம் கொடுப்பீர்!

சங்கத்தின் 50-ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, சங்கத்தின் பாடத்திட்டங்களையும் தமிழ்மொழியின் ஆன்மீகக் கருத்துக்களையும் உலக மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்லும் பொருட்டு இவ்வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

“வளர்ச்சி, பாதுகாப்பு, பங்களிப்பு, பொதுவுடைமை” எனும் உயரிய தத்துவத்தின் அடிப்படையில் தமிழால் வளர்ந்து, பாதுகாப்பு பெற்று, மக்கள் நல்வாழ்வு பெற தங்களால் இயன்ற பங்களிப்பை நல்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

உடல் உழைப்பு பங்களிப்பு
தொழில்நுட்ப உதவி
பொருளுதவி

திருப்பணி தொடர்புக்கு

ஒன்பதுகோள் திசைநோக்கு கோயில் திருப்பணிக்கு இட வசதி மற்றும் பங்களிப்பு அளிக்க:

96771-63144
நேரடித் தொடர்பு: சித்தர் பிறம்ம தேவர்
சங்கத் தலைவர், PSTNT

தொடர்பு கொள்ள

ஆய்வு நூல்கள் பெறவும், பயிற்சிகள் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் இணையவும் அழைக்கவும்

சென்னை முதன்மை அலுவலகம்

45/75, பிள்ளையார் கோயில் தெரு,
புத்தகரம், இலட்சுமிபுரம் (PO),
சென்னை - 600 099, தமிழ்நாடு, இந்தியா.

சங்கத் தலைவர் நேரடி அலைபேசி

+91 96771-63144
சித்தரடியார் ந. சண்முகம் (சித்தர் பிறம்ம தேவர்)

அதிகாரப்பூர்வ மின்னஞ்சல்

inlife@pstnt.in
இணைய தளம்: www.pstnt.in

அரசு பதிவு விபரம்

பதிவெண்: 298/2016
(முந்தைய பதிவு: 1456/1997)

தங்கள் தகவலை அனுப்பவும்

நூல்கள், பயிற்சிகள் அல்லது பங்களிப்பு குறித்த தங்களின் ஆர்வத்தைப் பதிவு செய்யுங்கள்.